У нас вы можете посмотреть бесплатно வக்ரகாளி அம்மன் கோயில்| திருவக்கரை| விழுப்புரம்| Vakrakali Amman Temple| Thiruvakkarai| Vilupuram| или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில், விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் திருவக்கரை என்ற ஊரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வக்கிர காளியம்மன் திருக்கோயில் பற்றி பார்ப்போம். உண்மையில் இந்த கோயிலின் பெயர் சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் ஆகும். ஆனால் இங்குள்ள காளி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுவதால், பக்தர்கள் இக்கோயிலை வக்கிரகாளியம்மன் கோயில் என்றே அழைக்கின்றனர். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இத்தலத்தை பற்றிய முக்கிய தகவல்கள்: மூலவர்: சந்திர மவுலீஸ்வரர் அம்பாள்: வடிவாம்பிகை தலவிருட்சம்: வில்வ மரம் தீர்த்தம்: சூரிய புஷ்கரிணி, சந்திர புஷ்கரிணி மற்றும் வராஹ நதி இத்தலம், திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். அடுத்து இக்கோயிலின் சிறப்புகளை பற்றி பாப்போம். முதலாம் ஆதித்த சோழன் தொடங்கி பல சோழ மன்னர்கள் இத்திருக்கோயிலை புதுப்பித்தும், விரிவு படுத்தியும் கட்டி உள்ளனர். இத்திருத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று பெருமைகளையும் பெற்ற தலமாக திகழ்கிறது. இங்குள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். மற்ற கோயில்களை போல் இல்லாமல், இத்தலத்தில் நந்தி, கொடிமரம், மூலவர் ஆகியவை நேர்கோட்டில் இல்லாமல் ஒன்றுக்கொன்று சற்று தள்ளி வித்தியாசமாக காணப்படுகின்றன. இங்குள்ள மூலவர் சந்திர மவுலீஸ்வரர் லிங்க வடிவில் மூன்று முகங்களுடன் காட்சி அளிக்கிறார். இங்கு வக்கிர காளியம்மன், சந்திர மவுலீஸ்வரர், வரதராஜ பெருமாள் மற்றும் சனி பகவான் சன்னதிகள் வெவ்வெறு நிலைகள், திசைகளை நோக்கியவாறு வக்கிர நிலையில் அமைந்துள்ளன. இத்தலத்தில், தாயார் இல்லாமல் தனித்து நின்ற கோலத்தில், மேற்கு நோக்கி அருள் புரியும் வரதராஜ பெருமாள், தனது சக்கரத்தை பிரயோகம் செய்வதற்கு அதாவது வீசுவதற்கு தயாராக இருப்பது போல காட்சி அளிக்கின்றார். பொதுவாக சனி பகவானின் வாகனமான காகம் வடக்கு முகம் பார்த்து இருக்கும். ஆனால் இத்தலத்தில் சனி பகவான் வக்கிர நிலையிலும் அவரது காகம் தெற்கு முகம் பார்த்து இருப்பதும் வித்தியாசமான அமைப்பு. பிரார்த்தனை சிறப்பு: இத்திருக்கோயில் அனைத்து விதமான "வக்ர தோஷங்களுக்கும்" வக்ரசாந்தி அளிக்க கூடிய புகழ்பெற்ற பரிகார தலமாக திகழ்கிறது. ஜாதகத்தில் கிரக தோஷங்கள், வக்ர தோஷங்கள் உள்ளவர்கள், வியாபாரத்தடை, உத்தியோகத் தடை, கண் திருஷ்டி, எதிரிகளின் தொல்லைகள் போன்றவை நீங்க இங்குள்ள வக்ரகாளியம்மனை மனமுருக வேண்டி வழிபடுகின்றனர். தொடர்ந்து மூன்று பவுர்ணமி நாட்களில், இரவு 12 மணியில், வக்ரகாளி அம்மன் சன்னதியின் கோபுரம் மேல் ஏற்றப்படும் ஜோதியை பக்தர்கள் தரிசித்தால் அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். எல்லா வித தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மன அமைதி பெறவும், முன் ஜென்ம பாவங்களில் இருந்து விமோசனம் பெறவும் இத்தலத்தில் உள்ள சிவபெருமானை வழிபடுகின்றனர். வக்கிரகாளி அம்மன் கோயிலில், வக்கிர காளி சன்னதிக்கு பின்புறம் தீப லட்சுமி மற்றும் நாகம்மாள் சன்னதி உள்ளது. ராகு கேது தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள தீப லட்சுமியை வேண்டி, தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி, எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இதை செய்வதால் ராகு கேது தொடர்புடைய அனைத்து தோஷங்களும் விலகும். விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் என்பது நம்பிக்கை. எந்த விதமான பிரச்சினைகள் இருந்தாலும் கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில் கட்டுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். பொதுவாக நவகிரக சன்னதியில் உள்ள சனி பகவானின் வாகனமான காகம் வடக்கு முகம் பார்த்து இருக்கும். ஆனால், வக்கிரகாளி அம்மன் கோயிலில், சனி பகவான் வக்கிர நிலையிலும் அவரது காகம் தெற்கு முகமாகவும் உள்ளது. இத்தகைய வித்தியாசமான அமைப்பு கொண்ட சனி பகவானை வேறெங்கும் காண்பது அரிது. ஆகையால் ஜாதகத்தில் சனி தோஷம், வக்ர சனி உள்ளவர்கள், கோச்சாரத்தில் ஏழரை, அஷ்டம சனி போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் இங்குள்ள சனி பகவானை வணங்கினால் அவர்களின் தோஷ பாதிப்புகள் வெகுவாக குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நவகிரக சன்னதியில் நவதானிய விளக்கு ஏற்றிய பின்பு இடதுபுறமாக ஏழு முறையும் வலது புறமாக இரண்டு முறையும் சுற்றி வரவேண்டும் என்பது ஐதீகம். இத்தலத்தில் வரதராஜ பெருமாள் சன்னதிக்கு பின்புறம் வன்னி மரம் மற்றும் வில்வ மரம் அடுத்தடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மூன்று பவுர்ணமி நாட்களில் திருமணம் ஆகாதவர்கள் இங்குள்ள வன்னி மரத்தில், கயிறு கட்டினால் அவர்களுக்கு திருமணம் நடைபெறும். அதேபோல குழந்தை இல்லதாவர்கள் இங்குள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. வக்கிரகாளி அம்மன் கோயிலில் இந்திராணி, கெளமாரி, வைஷ்ணவி, பிராமணி, வராகி, மகேஸ்வரி மற்றும் சாமுண்டி ஆகியோரை கொண்ட சப்த மாதா சன்னதி உள்ளது. இதில் சாமுண்டியே வக்ரகாளி அம்மனாக உருவெடுத்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள வராஹி அம்மனுக்கு பஞ்சமி, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் தீபம் ஏற்றி, விரலி மஞ்சள் மாலை அல்லது இனிப்பு வகைகள் அல்லது மரவள்ளி கிழங்கு படைத்து வேண்டிக்கொண்டால் அவர்கள் நினைத்த காரியத்தை வராஹி அன்னை முடித்து தருவாள் என்பது நம்பிக்கை. ஆலய நடை திறப்பு நேரம்: காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை. திருவக்கரை கிராமம் பாண்டிச்சேரி, திண்டிவனம் மற்றும் விழுப்புரத்தில் இருந்து தலா 25 கிமீ தொலைவில் உள்ளது. திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக பாண்டிச்சேரி செல்லும் பேருந்து வழியில், பெரும்பாக்கம் என்ற கிராமத்தில் கோயிலின் வளைவு அமைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் வக்ரகாளி அம்மன் கோயில் உள்ளது.