У нас вы можете посмотреть бесплатно Athiri Malai | Tirunelveli | அத்திரி மலையில் தோன்றும் கடனா நதி | kadana Nathi Dam |Tenkasi |Trekking или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருநெல்வேலி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமையப்பெற்றுள்ளது அத்திரி மலை. இது இயற்கை எழில் சூழ்ந்த காடுகள் மற்றும் பல அரிய வகை மூலிகைகள் நிறைந்த மலைப்பகுதியாகத் திகழ்கிறது. இங்கு யானை, செந்நாய், சிறுத்தை, மிளா போன்ற உயிரினங்கள் நிறைந்து வாழ்கின்றன. பல தெளிந்த நீரோடைகளையும், நீர் ஊற்றுக்களையும் கொண்டு திகழும் இங்குத் தான் தென்னகத்தின் கங்கை என்று அழைக்கப்படும் கடனா நதி உற்பத்தியாகிறது. இந்தக் கடனா நதி, கருணை நதி என்றும் அழைக்கப்படுகிறது. அதிசயங்கள் பல நிரம்பிய இந்த மலைப்பகுதியை பற்றி இங்கு நாம் காண்போம். பன்னீர் மழை பொழியும் மரங்கள்: ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் முதல் ஐந்து நாட்களும், பங்குனி மாதத்தின் கடைசி ஐந்து நாட்களும் இங்குள்ள அமிர்தவர்ஷினி எனப்படும் மரத்திலிருந்து பன்னீர் மழை பொழியும் அதிசய நிகழ்வு நிகழ்ந்து வருகிறது. வெப்பமான கோடை காலமாகக் கருதப்படும் இந்த மரங்களிலிருந்து இவ்வகையான மழை பொழிவது மிகவும் அதிசயமாக இருக்கிறது. இந்தக் கோவிலின் பகுதியில் பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் அருளால் தான் இந்தப் பன்னீர் மழை பொழிவதாகவும் நம்பபப்படுகிறது. வனத்துறை அதிகாரிகள் இந்த மழை பொழிவு பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டபோது, இந்த மழைக்கு காரணம் இந்த மரத்தில் காணப்படும் சிறிய பூச்சிகள் என்று தெரிய வந்ததாகக் கூறுகிறார்கள். அந்தப் பூச்சிகள் அமிர்தவர்ஷினி மரங்களின் பட்டைகளிலிருந்து நறுமணமிக்க தண்ணீரை உறிஞ்சி மழையாகப் பொழிகின்றன என்று கூறுகிறார்கள். எனினும் இந்த அதிசய நிகழ்வு எல்லா நாட்களிலும் நடைபெறுவதில்லை. ஒரு ஆண்டுல் ஒரே சில நாட்களில் மட்டுமே நிகழ்வதற்கான காரணத்தை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்தப் பன்னீர் மழை பொழிவு கோவிலின் கிழக்கு மற்றும் மேற்கில் அமைந்துள்ள இரண்டு குறிப்பிட்ட மரங்களில் மட்டுமே நிகழ்கிறது. இந்தச் சிறிய பூச்சிகள் எவ்வாறு பெரிய அளவிலான மழையை பொழிய செய்ய முடியும் என்பது விடை தெரியாத கேள்வியாகத்தான் இன்றுவரை இருக்கிறது. வடக்கே உள்ள கேதார்நாத் திருத்தலம் போன்று தெற்கே மகிமை பெற்று திகழ்கின்றது அத்ரிநாத் எனப்படும் அத்ரிமலை கோயில். அகத்தியர் பொதிகை மலைக்கு வருவதற்கு முன்பே இந்த பகுதியில் அத்ரி மகரிஷி வாழ்ந்ததாக கூறப்படுகின்றது. இந்த மலைக்கு வந்து வழிபட்டால் அத்ரி, அகத்தியர், கோரக்கர் போன்ற தவசீலர்களின் திருவருளை பெறுவதுடன் சிவனாரின் அனுகிரகத்தையும் பரிபூரணமாக பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்திருக்கோயிலை வலம் வரத் துவங்கினால் இடதுபுறம் இரட்டை விநாயகர்கள், வலப்புறம் மகிஷாசுர வர்த்தன், அத்திரி, அகத்தியரும் காட்சி தருகின்றனர். இக்கோயிலின் தென்புறச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி கோயிலின் பின்புறத்தில் பிரம்மாவும், வடக்கு புறச்சுவற்றில் விஷ்ணுவும் எதிர்ப்புறம் சாஸ்தாவும் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் முன்பு வந்தால் தேவியருடன் அருளும் முருகனைத் தரிசிக்கலாம். Please subscribe my channel : https://youtube.com/@NELLAINARAN?si=K...