У нас вы можете посмотреть бесплатно பேரூர் பட்டீஸ்வரர் கோயில் வரலாறு 🕉️ Perur Patteeswarar Temple History! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பிரம்மதேவரின் படைப்புத் தொழிலின்போது அவர் சோர்வுற்றிருந்தார், இதனால் படைப்புத் தொழிலில் தடை ஏற்பட்டன. இதை அறிந்த மகாவிஷ்ணு, காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார். அதன்படி காமதேனுவும் இமயமலைக்குச் சென்று அருந்தவமிருந்தது. ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை. அச்சமயம் நாரத முனிவர் தாம் வழிபட்ட தசஷிண கைலாயத்தைப் பற்றி காமதேனுவிடம் சொன்னார். காமதேனுவும் கன்றுடன் நாரதர் கூறிய இடத்தை அடைந்து அங்கே ஆதிலிங்க மூர்த்தியாகக் காஞ்சிமா நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலைச் சொரிந்து வழிபட்டுத் தவமிருந்தது. ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி, மேய்ச்சலின்போது, அந்த ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை, மேயலில் குலைத்து விட்டது. கன்றின் குளம்படி சிவவெருமானின் திருமுடியில் அழுந்தப் பதிந்தன. இதைக் கண்டு பதறிப்போனது தாய் காமதேனு. காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, சிவபெருமான் தோன்றினார். பார்வதி தேவியின் வளைத்தழும்மை என் மார்பகத்தில் ஏற்றுக்கொண்டதுபோல், உன் கன்றின் குளம்படித் தழும்பையும் நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன் என்று ஆறுதல் கூறினார் காமதேனுவிடம். இது முக்தி தலம் என்பதால், நீ வேண்டிய சிருஷ்டி ரகசியத்தை இங்கே அருள முடியாது. அதை திருக்கருவூரிலேயே உனக்கு அருளுகிறேன். அதுவரை இங்கே நீ தொடர்ந்து தவமிருந்து எனது நடன தரிசனத்தைக் காண்பாயாக! மேலும் உன் நினைவாக இத்தலம் பட்டிபுரி, காமதேனுபுரம் என்று வழங்கப்படும். எனக்கு பட்டிநாதர் என்ற ஒரு திருப்பெயரும் இவ்வூரில் வழங்கட்டும் என்று அருளினார். கோவை திருப்பேரூர் ஆலயம் தொன்மையும் பழமையும் கொண்டது. இத்திருக்கோயிலின் கற்பக்கிரஹத்தை கரிகால் சோழன் அமைத்தான். ஆறாம் நூற்றாண்டில், அப்பர் பெருமான் இவ்வாலயத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில் ஒரு பாண்டிய மன்னன், வைணவ ஆலயம் ஒன்றை இங்கே நிறுவினான். ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இவ்வாலயம் வந்து பாடியதை தேவாரம் எடுத்துக் காட்டுகிறது. இவ்வாலயத்துள் அமைந்திருக்கும் புகழ்வாய்ந்த கனகசபை, மதுரை அளாகத்ரி நாயக்கரால் பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயிலின் தெப்பக்குளம் மிக அழகானது. பதினாறு வளைவுகளைக் கொண்டது. இத்திருக்கோயிலுக்குப் பெருமை சேர்ப்பவை – காஞ்சிமாநதி என்னும் நொய்யல் நதியாகும். (இப்போது இந்த நதியின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, குப்பை மற்றும் பாலித்தீன் கழிவுகளால் மாசுபட்டு மறைந்துள்ளது. பெரிய மழை ஒன்று பெய்தாலொழிய இந்நதி வழித்தடத்தைக் காண முடியாது.) அடுத்து சோழன் துறை, இதனருகில் பட்டிவிநாயக ஆலயம், வடகைலாசம், தென்கைலாசம் ஆலயங்கள். “ஆரூரார் பேரூரார்” எனவும், “பேரூர் பிரமபுரம் பேராவூரும்” எனவும் அப்பர் சுவாமிகள் தனது ஷேத்திரக் கோவையில் இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறார். ஆக சுமார் கி.பி. 650-க்கு முன்னரே திருப்பேரூர் பட்டீசுவரர் ஆலயம் கட்டப்பட்டிருப்பதென்று தெரியவருகிறது. (பேரூர் பற்றிய தனி தேவாரம் மறைந்து போய்விட்டதாக கருத்துண்டு). பல தேவர்களும் பல அரசர்களும் பல முனிவர்களும் இவ்விறைவனை வழிபட்டு உய்தி பெற்றார்கள் என்பதற்கு இப்பேரூர் புராண படலங்களில் தெரியும். பற்பல தேவர்கள் முனிவர் அரசர் போன்றோர்கள் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டது புராணச் சரிதத் சான்றில் உள்ளன. இத்தலத்தின் மூர்த்தியாகிய பட்டிநாதர், பட்டீசர் என்ற பெயர், பசுவாகிய காமதேனுவினால் பட்டியிட்டுப் பூசிக்கப்பெற்ற வரலாறு ஆகும்.