У нас вы можете посмотреть бесплатно வெற்றிக்காக ஓர் அகச்சூழலை உருவாக்குதல் | Creating Inner Environment for Success или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வெற்றியைப் பற்றிய இந்த வழிகாட்டப்படும் தியானம், பரமஹம்ஸ யோகானந்தருடைய “Scientific Healing Affirmations”-லிருந்து ஒரு சங்கல்பத்தைப் பயன்படுத்துகிறது. எளிய, விஞ்ஞானரீதியான தியான வழிமுறைகள் மற்றும் சங்கல்பம் மூலமாக, உங்களது ஆன்மாவினுள் உறையும் அமைதியையும் ஆனந்தத்தையும் நீங்கள் அனுபவித்து — அகத்தே ஒரு நேர்மறையான மாற்றத்தை உருவாக்க முடியும். இது பின்னர் உங்கள் வாழ்க்கையில் உண்மையான வெற்றியாக வெளிப்படும். உங்களது தியானத்தைத் தொடங்குவதற்கு முன்பு, தியான வேளையின் போது நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொந்தரவு செய்யப்படாமல் இருக்க, மிகவும் அமைதியான ஓர் இடத்தைக் காண்பது முக்கியமானது. நீங்கள் ஒரு நேரான நாற்காலியிலோ அல்லது ஒரு திடமான பரப்பின் மீது சப்பணமிட்டோ அமர்வதற்குத் தேர்ந்தெடுக்கலாம். சரியான தியான அமர்வுநிலையில் அமர்வதற்கு, முதுகுத்தண்டு நேராக வைக்கப்பட்டும், முகவாய்க்கட்டை தரைக்கு இணையாகவும், உடல் அசைவற்று, தளர்த்தப்பட்டும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது கண்களை மூடி, மென்மையாக, சிரமமின்றி, உங்களது பார்வையை புருவங்களுக்கு மத்தியில் — ஒருமுகப்பாடு மற்றும் ஆன்மீகக் கண் அல்லது தெய்வீகக் காட்சியின் இருப்பிடம் — மேல்நோக்கி உயர்த்தவும். உலகத்தைப் பற்றிய எல்லா எண்ணங்களையும் ஒதுக்கி, கவனத்தை அகத்தே கொணர்ந்து, ஆன்மீகக் கண்ணில் உங்களது பார்வையைக் குவித்து வைப்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். அனைத்துப் பொறுப்புகளையும் கவலைகளையும் கைவிட்டு, அகத்தே அமைதியை உணருங்கள். பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ள அல்லது யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-வின் பாடங்களுக்குப் பதிவு செய்துகொள்ள, எமது வலைதளத்தைப் பார்வையிடவும்: https://yssofindia.org/yss-lessons சங்கல்பங்களின் மூலமாக உடலையும் மனத்தையும் குணமாக்கும் விஞ்ஞானத்தைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்வதற்கு, எமது புத்தகநிலையத்தில் கிடைக்கப்பெறும் பரமஹம்ஸ யோகானந்தரின் “Scientific Healing Affirmations”–ஐப் படிக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்: https://bookstore.yssofindia.org/prod... #GuidedMeditationsinTamil ##GuidedMeditations #InnerEnvironmentForSuccess #Yogananda #SelfRealizationFellowship #YogodaSatsangaSocietyofIndia #YogaMeditation #YSS #ScientificMethodsOfMeditation #Yogananda #KriyaYoga #Meditation #YogaMeditation #Paramahansa #SelfRealizationFellowship #YogodaSatsangaSocietyofIndia, #YSS #HowToLive