У нас вы можете посмотреть бесплатно திருவலிவலம் - பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர் நுதல் - திருஞானசம்பந்தர் தேவாரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
01.123 திருவலிவலம் | பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர் நுதல் | திருஞானசம்பந்தர் தேவாரம் | @ThiruneriyaThamizhosai கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும்.வலியன் என்ற கரிக்குருவி இத்தலத்தை வலம் வந்து பூஜை செய்ததால் திருவலிவலம் என்ற பெயர் ஏற்பட்டது. ஆலயத்தைச் சுற்றி நான்கு புறமும் அக்காலத்தில் அகழி இருந்தது என்பது இத்தலத்து தேவாரப் பதிகங்களில் "பொழில் சூழ்ந்த வலிவலம்" என்று குறிப்பிட்டிருப்பதின் மூலம் அறியலாம். இத்தலத்திற்கு ஏகசக்கரபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. இவ்வாலயத்தில் உள்ள திருமால் ஏகசக்கர நாராயணப்பெருமாள் என்ற பெயருடன் காட்சி தருகிறார். சூரியனும், காரணரிஷியும் இத்தல இறைவனை பூசித்துப் பேறுபெற்றுள்ளனர். தேவாரப் பாடல் பாடும் ஓதுவார்கள், தேவாரப் பாடல் பாடும் முன் இத்திருப்பாடலுடன் தான் தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள். தேவாரம் ஓதுவோர் யாவரும் முதன் முதலாக ஓதும் “பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர் கடி கணபதி வர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே! என்ற திருப்பாட்டு திருஞானசம்பந்தரால் முதல் திருமுறையில் இத்தலத்து இறைவன் மேல் பாடப்பெற்ற "பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர் நுதல்" என்ற பதிகத்தின் ஐந்தாவது பாடலாகும். எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஆரம்பிக்கும் முனபு விநாயகருக்கு வந்தனம் சொல்லிவிட்டுத் தான் ஆரம்பிப்பது நமது மரபு. அதன்படி கணபதிவர அருளினான் என்று இப்பாடலில் வரும் கணபதியை தொழுதுவிட்டு தேவாரம் பாட ஆரம்பிப்பார்கள். சுந்தரர் தனது பதிகத்தில் ஐந்தாவது திருப்பாட்டில், சிறந்த இசைத்தமிழைப் பாடிய திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் அருளிச்செய்த பாடலகளைப் பெற்ற இறைவன் வலிவலத்தில் உள்ளான் என்று அவர்கள் இருவரையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மனத்துணை நாதர், ஸ்ரீ இருதய கமலநாதேஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மாழைஒண் கண்ணி, ஸ்ரீ அங்கயற்கண்ணி திருமுறை : முதல் திருமுறை 123 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள் பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் திருவாரூர்ப் புற்றிடங்கொண்டபெருமானைச் சேவித்துச் சிலநாள் தங்கியிருந்த திருஞானசம்பந்தப் பிள்ளையார் வளமிகுந்த வலிவலத்தை அடைந்தார்கள். மனத்துணை நாதரை வணங்கி இப்பதிகத்தை அருளிச்செய்தார்கள். 00:13 பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர் நுதல் ஏவியல் கணை பிணை எதிர் விழி உமையவள் மேவிய திருவுரு உடையவன் விரைமலர் மாவியல் பொழில் வலிவலம் உறை இறையே. ..... (01) 01:31 இட்டமது அமர் பொடி இசைதலின் நசைபெறு பட்டு அவிர் பவள நல்மணி என அணிபெறு விட்டு ஒளிர் திருவுரு உடையவன் விரைமலர் மட்டமர் பொழில் வலிவலம் உறை இறையே. ..... (02) 03:09 உருமலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர் வெருவுறு வகை எழு விடம் வெளிமலை அணி கருமணி நிகர் களம் உடையவன் மிடைதரு மருமலி பொழில் வலிவலம் உறை இறையே. ..... (03) 04:55 அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு புனல் நிகழ்வதும் மதி நனை பொறி அரவமும் என நினைவொடு வரும் இதும் மெல முடிமிசை மனம் உடையவர் வலிவலம் உறை இறையே. ..... (04) 05:52 பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர் கடி கணபதி வர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே. ..... (05) 09:04 தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக விரைமலி குழல் உமையொடு விரவது செய்து நரை திரை கெடுதகை அது அருளினன் எழில் வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே. ..... (06) 09:57 நலிதரு தரைவர நடை வரும் இடையவர் பொலிதரு மடவரலியர் மனையது புகு பலிகொள வருபவன் எழில் மிகு தொழில் வளர் வலிவரு மதில் வலிவலம் உறை இறையே. ..... (07) 11:13 இரவணன் இருபது கரம் எழில் மலைதனின் இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து இரவணம் அமர் பெயர் அருளினன் நகநெதி இரவண நிகர் வலிவலம் உறை இறையே. ..... (08) 13:08 தேனமர் தருமலர் அணைபவன் வலி மிகும் ஏனமதாய் நிலம் அகழ் அரி அடி முடி தான் அணையா உரு உடையவன் மிடை கொடி வான் அணை மதில் வலிவலம் உறை இறையே. ..... (09) 13:54 இலைமலி தரமிகு துவர் உடையவர்களும் நிலைமையில் உணல் உடையவர்களும் நினைவது தொலைவலி நெடுமறை தொடர் வகை உருவினன் மலைமலி மதில் வலிவலம் உறை இறையே. ..... (10) 14:41 மன்னிய வலிவல நகர் உறை இறைவனை இன்னியல் கழுமல நகர் இறை எழில் மறை தன்னியல் கலைவல தமிழ் விரகனது உரை உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே. ..... (11) பதிகப் பலன் : நிலைபேறுடைய வலிவல நகரில் உறையும் இறைவன் மீது இனிமையான இயல்பினை உடைய கழுமல நகருக்குத் தலைவனும் அழகிய வேதங்களையும் கலைகளையும் ஓதாமல் தானே உணர்ந்த தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் எண்ணிஉரைத்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தும் உயர்வான வீடு பேறாகிய செல்வத்தை அளிக்கும். ஆலய முகவரி : அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோவில், வலிவலம், வலிவலம் அஞ்சல், திருக்குவளை வட்டம், திருவாரூர் மாவட்டம், PIN 610 207. எப்படிப் போவது : திருவாரூருக்கு தென்கிழக்கே 9 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகபட்டினத்தில் இருந்து கீவளூர் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம். இரண்டுமே நல்ல பாதைகள். குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"