У нас вы можете посмотреть бесплатно பூண்டி மகான் ஆற்று ஸ்வாமிகள் | Sri Poondi Mahan Attru Swamy | உண்மை அற்புத நிகழ்வுகள் |VIYASAR|TAMIL или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருவண்ணாமலை என்றவுடன் மகான் சேஷாத்ரி சுவாமிகள், மகான் ரமண மஹரிஷி பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட புண்ணிய ஸ்தலமான திருவண்ணாமலை அருகே போளூர் அருகேயுள்ள கலசப்பாக்கத்தில் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஶ்ரீ பூண்டி மகான். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து ஜீவசமாதியான ஶ்ரீ பூண்டி ஆற்று ஸ்வாமிகளைப் பற்றி அதிகம் பேர் அறிந்ததில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் போளுர் தாலுகாவில் பூண்டி என்னும் சிறிய கிராமம். அங்கு வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தியவர் ஶ்ரீ பூண்டி மகான் ஆவார். இவரின் அன்பும் தீட்சண்ய பார்வையும் இவரை மகான் என மக்களுக்கு அடையாளம் காட்டியது. இவர் செய்த பல அற்புதங்கள் பற்றிய தகவல்கள், போளூர், கலசப்பாக்கம், பூண்டி போன்ற இடங்களில் வாழும் மக்களால் பிரமிப்பாக பேசப்படுகிறது. நீண்ட தாடியும் தீட்சண்ய பார்வையுமாக மிக எளிமையான மனிதரைப் போல் காட்சியளிக்கும் இந்த மகானை அவதாரப் புருஷனாக அந்தப் பகுதி மக்கள் பக்தியோடவணங்கினார்கள். பூண்டி மகான் அந்த கிராமத்திற்கு வந்தபோது யாரோ ஒரு பித்தன் என்பது போலத்தான் அந்த கிராம மக்கள் அவரை பார்த்தனர். ஆனால் அவருக்குள்ள அமானுஷ்ய சக்தியினால் அவர் தந்த திருநீறு மற்றும் மூலிகைகளால் எந்தவித நோயையும் குணப்படுத்தி அக்கிராம மக்களை பாதுகாத்து வந்தார். இதனால் பாமர மக்களும், மற்றவர்களும் அவரைத் தேடியும், நாடியும் வந்து வணங்கி நல்ல பலன்களை பெற ஆரம்பித்தனர். 1955-களில் பூண்டி மகான் ஆரம்ப காலத்தில் கலசப்பாக்கம் கிராமத்தில் இவர் காக்கும் கரைப் பிள்ளையார் கோயில், அல்லது ஒரு இடிந்த மசூதியில் இருப்பார். இந்த ரெண்டு இடத்தில் இல்லாவிட்டால் அவரை நிச்சயம் திரௌபதி அம்மன் கோவில் அருகே ஒரு மரநிழலில் பார்க்கலாம். அவர் கந்தல் உடுத்திய பைத்தியம் போன்று உலவி வந்திருக்கிறார். அவரை அங்குள்ளவர்கள் கேலி செய்த போதும் எதிர்ப்போ மறுப்போ கூறாமல் அமைதியாக அங்கிருந்து சென்று விடுவார். மேலிருந்து முழங்காலுக்கு கீழே வரையிலும் கம்பளி போன்ற சட்டையைப் போட்டிருப்பார். அதை கழற்றமாட்டார். அது கிழிந்து நைந்துவிட்டால் யாராவது வேறு சட்டை போட்டால் அந்த கிழிந்த சட்டை மேலேயே போட்டுக் கொள்வார். ஒரு விசித்திர நிகழ்ச்சி மூலமாக கலசப்பாக்கம் கிராம மக்கள் அவரை மகாசித்த புருஷர் என்று கண்டுகொண்டார்கள். கலசபாக்கம் கிராமத்தில் ஓடுகின்ற செய்யாறு என்ற ஆற்றின் மணல் மேல் வாரக்கணக்கில் எழுந்திருக்காமல் அமர்ந்திருப்பார். சுட்டெரிக்கும் வெயிலானாலும் அந்தச் சுடும் மணலில் சந்தோஷமாக முழு நிலவொளியில் அமர்ந்திருப்பதைப் போன்று உட்காந்திருப்பார். ஒரு சமயம் கனமழை பெய்ததால் திடீரென்று வெள்ளம் வந்தது. ஆற்றில் அமர்ந்திருந்த பைத்தியக்கார சுவாமிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவார் என்றே நினைத்தார்கள். வெள்ளம் குறைந்த பின்பு கிராமத்தார் பலர் சுவாமிகள் அமர்ந்திருந்த இடத்தில் பார்த்தபொழுது சுவாமியின் உடல் எல்லாம் மணலால் மூடப்பட்டு தலைமட்டும் மேலே தென்பட்டது. சுவாமிகளே தன் மேலுள்ள மணலை தானே அப்புறப்படுத்திய பிறகு, மௌனமாக எழுந்து சென்று விட்டார். அவ்வளவு வெள்ளத்தில் மூழ்கியும் அவர் ஒன்றுமே நடக்காததைப் போல் இருப்பதைக் கண்களால் கண்ட ஊர் மக்கள், அவர் சாதாரணமானவர் இல்லை என்றும், மகா சித்த புருஷர் என்றும் தெரிந்துகொண்டார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் சுவாமிகளின் மகிமை பரவ ஆரம்பித்தது. இந்நிகழ்ச்சி மூலமாகவே சுவாமியை ‘ஆற்று சுவாமிகள்’ என்று அழைத்தனர். தனது யோகசக்தியின் மூலம் இரும்பைத் தங்கமாக மாற்றுவது வள்ளலார் குறிப்பிட்டதுபோல யோகசித்தி வகையைச் சார்ந்ததாகும். நினைத்த நேரத்தில் ஒரு சாதாரண உலோகத்தை உயர்ந்த (தங்க) உலோகமாக மாற்றும் அற்புத சித்தியினை பூண்டி மகான் பெற்றிருந்தார். அவர் அந்த சித்தியினைத் தன் சுயநலத்துக்காகப் பயன்படுத்தாமல், பிறர் நலனுக்காக மட்டும் பயன்படுத்தி வந்தார். ஶ் ஶ்ரீ பூண்டி மகான் ஜீவசமாதி: பத்தொன்பது ஆண்டுகள் ஒட்டுத் திண்ணையில் அமர்ந்தவாறு அருளாட்சி வழங்கிய மகான் ஜீவசமாதி அடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன், தன் பக்தர் சுப்பிரமணியத்திடம் “நான் வடக்கே போய் செய்ய வேண்டிய வேலைகளை முடித்துக்கொண்டு சொல்ல வேண்டியவர்க்குச் சொல்லிவிட்டு அதன் பிறகு வந்து பூண்டியிலேயே இருந்து விடுவேன்” என்று கூறினார். இரண்டு நாட்கள் கழித்து தாம் சொல்ல வேண்டிய பதினெட்டு சித்த புருஷர்களுக்கு சொல்லிவிட்டு வந்தேன் என்று சுப்பிரமணியத்திடமே கூறினார். மறுநாள் 1978 நவம்பர் 3ஆம் தேதி அனுஷ நட்சத்திரம் அன்று காலை 9 மணியளவில் ஜீவசமாதி ஆனார். சமாதியடைந்த சிறிது நேரத்தில் மேகமூட்டம் ஏற்பட்டு கனத்த மழை ஆரம்பித்து மூன்று நாட்கள் இடைவிடாமல் பொழிந்தது. கனத்த மழையால் அந்த மூன்று நாட்களும் சுவாமியின் உடலை அப்படியே பக்தர்களின் தரிசனத்திற்கு வைத்திருந்தார்கள். மூன்று நாட்கள் ஆனபிறகும் மகானின் தேகம் கெடாமலும், இறுகிப் போகமலும், எந்தவித துர்நாற்றமும் வராமலும், உயிருடன் இருக்கும்போது எப்படி இருந்தாரோ அப்படியே ஜீவக்களையுடன் இருந்தார். பின்பு ஸ்ரீ மகான் அமர்ந்திருந்த திண்ணைக்கு அருகிலுள்ள இடத்தில் சமாதியை ஏற்படுத்தினார்கள். இங்கு மகானுக்கு ஒரு கோயிலும் கட்டப்பட்டுள்ளது. இங்கு சென்று நாம் மனப்பூர்வமாக வேண்டினால் சமாதியில் ஜீவனுடன் இருக்கும் பூண்டி சுவாமிகள் நம்மை காப்பாற்றுவார் என்பது பரிபூர்ண உண்மையாகும். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் என்கிற நகருக்கு மேற்கேயுள்ள கலசப்பாக்கத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் இவரது ஜீவசமாதி உள்ளது. ஜீவசமாதியில் இருந்து கொண்டு இன்றும் ஶ்ரீ பூண்டி மகான் ஆசி வழங்குகிறார். ஶ்ரீ பூண்டி மகான் திருவடிகள் போற்றி! #POONDIMAHAN #poondi #mahaperiyava