У нас вы можете посмотреть бесплатно 04.001 திருஅதிகை வீரட்டானம் | கூற்றாயின வாறு விலக்ககிலீர் | திருநாவுக்கரசர் தேவாரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
04.001 திருஅதிகை வீரட்டானம் | கூற்றாயின வாறு விலக்ககிலீர் | திருநாவுக்கரசர் தேவாரம் | #PanniruThirumurai #VeerattaneswararTemple | #Thiruvathigai | #Thirunavukarasar | #Thevaaram சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார். கடலூர் மாவட்டம் திருவதிகை வீரட்டானத்தில் அருள்புரியும் ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் மீது பாடிய இந்த பாடல் திருநாவுக்கரசரின் முதல் திருப்பதிகம் ஆகும். இதன் மூலம் திருநாவுக்கரசருக்கு சூலை நோய் என்னும் வயிற்று வலி நீங்கியதாக வரலாறு கூறுகிறது. இத்திருப்பதிகத்தை பாடினால் வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அதிகை வீரட்டேஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ திரிபுரசுந்தரி திருமுறை : நான்காம் திருமுறை பதிகம் எண் : 001 பாடல் எண் : 01, 02 மற்றும் 10 அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள் பதிக குரலிசை : திரு தம்பையா ஓதுவார் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற ஊரில் புகழனார், மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலவதியும், மகனாக மருள் நீக்கியாரும் பிறந்தனர். மருள் நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வருகிறார். தமக்கை திலவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார் போரில் இற்ந்துபோக, இனி தனக்கு திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து இறைப்பணி செய்து வாழ்ந்து வருகிறார். தம்பி சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார அருள்புரிய வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலைநோய் தாக்குகிறது. சூலைநோயின் கொடுமை தாங்க முடியாமல் தம்பி துன்பப்படுவதைக் கண்ட திலகவதி திருவதிகை இறைவனிடம் கூட்டிச் சென்று அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும் "கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன் நான் அறியேன்..." என்ற பாடலுடன் தொடங்கும் பதிகத்தைப் பாடி சூலை நோய் நீங்கப் பெற்றார். மேலும் நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் சைவ சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். தனது சூலை நோய் நீங்கப் பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும். 00:23 கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான் அறியேன் ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே. ...... (01) பொருளுரை : கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும் திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத் தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில் என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால் அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத் துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும் காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும் மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன். 02:21 நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாது ஒரு போதும் இருந்தறியேன் வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர் அஞ்சேலும் என்னீர் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே. ...... (02) பொருளுரை : அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! என் நெஞ்சத்தை உம்மிடத்திலேயே உறைவிடம் பெறுமாறு பண் படுத்திவிட்டேன். இனி ஒரு பொழுதும் உம்மை நினையாமல் இருக்க மாட்டேன். இச்சூலைநோயைப் போலக் காரணத்தைப் புலப்படுத்தாமல் காரியத்தில் செயற்படும் கொடுநோயை அடியேன் இதுகாறும் அனுபவித்தறியேன். வயிற்றினோடு ஏனைய உள்ளுறுப்புக்களைக் கட்டி அவை செயற்படாமல் மடக்கியிடுவதற்கு விடம் போல வந்து என்னைத் துன்புறுத்தும் நோயை விரட்டியோ செயற்பாடு இல்லாமல் மறைத்தோ என்னைக் காப்பீராக. அஞ்சேல் என்று எனக்கு அருளுவீராக. 04:02 போர்த்தாய் அங்கோர் யானையின் ஈருரிதோல் புறங்காடு அரங்கா நடம் ஆடவல்லாய் ஆர்த்தான் அரக்கன் தனை மால்வரைக்கீழ் அடர்த்திட்டு அருள்செய்த அது கருதாய் வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனையான விலக்கியிடாய் ஆர்த்தார் புனல்சூழ் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே. ...... (10) பொருளுரை : அதிகமான நீரினை உடையதால் மிகுந்த ஆரவாரத்துடன் ஓடும் கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை நகரில் உறையும் இறைவனே, தாருகாவனத்து முனிவர்களால் உன் மீது ஏவிவிடப்பட்ட யானையின் தோலை உரித்து உனது உடலின் மீது போர்த்துக் கொண்டாய். ஊருக்கு புறம்பே உள்ள காட்டினை அரங்கமாக மாற்றிக்கொண்டு நடமாட வல்லவனே, தனது வழியில் எதிர்ப்பட்ட கயிலாய மலையை பேர்த்தேடுப்பேன் என்று மிகுந்த ஆரவாரத்துடன் முயற்சி செய்த இராவணனை, முதலில் அவனது செருக்கு அடங்குமாறு மலையின் கீழே அழுத்தி வருத்திய பின்னர், அவன் பாடிய சாமகானத்திற்கு மகிழ்ந்து அவனுக்கு அருள்கள் பல செய்தாய். அதே போல், முன்னர் நான் செய்த கொடுமைகளை பொருட்படுத்தாது, சூலை நோயின் கொடுமையால், வேர்த்தும், புரண்டும், எழுந்தும், விழுந்தும் துன்பப்படும் எனது வேதனைகளை, நீர் தான் களையவேண்டும். குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். Join To Support : / panniruthirumurai "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"