У нас вы можете посмотреть бесплатно 04.011 நமச்சிவாய திருப்பதிகம் | சொற்றுணை வேதியன் சோதி வானவன் | திருநாவுக்கரசர் தேவாரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
04.011 நமச்சிவாய திருப்பதிகம் | சொற்றுணை வேதியன் சோதி வானவன் | திருநாவுக்கரசர் தேவாரம் | @PanniruThirumurai #NamachivayaThirupathigam | #SotrunaiVedhiyan | #ThirunavukkarasarThevaram "சொற்றுணை வேதியன்" என்னும் திருநாவுக்கரசரின் நமச்சிவாயப் பதிகம் அச்சங்கள் மற்றும் ஐயங்கள் நீங்கித் தன்னம்பிக்கை வளரப் பாடப்படுகிறது. சைவ சமயக் குரவர்கள் நால்வரும் சிவபெருமானின் திருவைந்து எழுத்தான நமசிவாயத்தை தனது பாடல்களில் போற்றிப் பாடி அதன் பெருமைகளை விளக்கியுள்ளனர். "வழித்துணை நன்றாக அமையவும், எத்தனை துன்பத்திலும் முக்தி கிட்டவும் ஓத வேண்டிய திருப்பதிகம்." திருமுறை : நான்காம் திருமுறை 011 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள் பதிக குரலிசை : திரு மதுரை திருஞானசம்பந்தம் ஓதுவார் சமண சமயத்திலிருந்து திருநாவுக்கரசர் மீண்டும் சைவ சமயம் சார்ந்ததை அறிந்த பல்லவ மன்னன், சமண குருமார்களின் ஏவலால் திருநாவுக்கரசரை அழைத்துவரச்செய்தான். சமணர்களின் தூண்டுதலினால் அரசன் அவரைக் கொல்வதற்காக நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாயில்) இட்டான். அதில் அவர் பிழைத்தது கண்டு சமணர்கள் அவர்க்கு நஞ்சு கலந்த சோற்றை ஊட்டினர். அதுவும் அவரை ஒன்றும் செய்யவில்லை. அவரை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்ற எண்ணத்தால் பட்டத்து யானையை ஏவினர். அதுவும் அவரைக் கொல்லாமல், வணங்கி அகன்றது. எப்படியேனும் கொன்று விட வேண்டும் என்று கருதித் திருநாவுக்கரசரைக் கல்லோடு கட்டிக் கடலில் வீசினர். அச்சமயத்தில் திருநாவுக்கரசர் "சொற்றுணை வேதியன்" என்று தொடங்கும் இப்பதிகத்தைப் பாடியருளினார். ஈசன் அருளால் அக்கல் கடலில் தெப்பம் போல் மிதந்து அவரைக் கரைசேர்த்தது. சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சிவாயவே. ..... (01) பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல் கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே. ..... (02) விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம் பண்ணிய உலகத்தில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே. ..... (03) இடுக்கண் பட்டிருக்கினும் இரந்து யாரையும் விடுக்கில் பிரான் என்று வினவுவோம் அல்லோம் அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே. ..... (04) வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கெலாம் அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம் திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே. ..... (05) சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால் நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம் குலமிலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே. ..... (06) வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும் ஓடினேன் ஓடிச்சென்று உருவம் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே. ..... (07) இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே. ..... (08) முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன் தன்னெறியே சரண் ஆதல் திண்ணமே அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் நன்னெறியாவது நமச்சிவாயவே. ..... (09) மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே. ..... (10) பொருளுரை : மான் கன்றினை இடது கையில் ஏந்தியும், இடது பாகத்தில் உமையம்மையை ஏற்றுக் கொண்டும் காட்சி அளிக்கும் சிவபிரானின் திருவடிகளை, அனைவரும் மலர்கள் தூவி வழிபடுவதால் எப்போதும் பூக்களுடன் இணைபிரியாது இருக்கும் திருவடிகளை நமது மனத்தினில் பொருத்தி, நமது நாவுடன் நமச்சிவாயப் பதிகத்தினை பிணைத்து சிவபிரானை புகழ்ந்து பாட வல்லவர்களுக்கு எத்தைகைய துயரங்களும் ஏற்படாது. வாழ்வில் எத்தனைத் துன்பம் வந்தாலும் அவற்றை வெற்றி கொண்டு மீளவும், பயணம் மேற்கொள்ளும்போது நன்மை தரும் வழித்துணைகள் அமையவும், பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவும் நாம் ஓத வேண்டிய பதிகம் என்று பெரியோர்களால் கருதப்படுகின்றது. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"