У нас вы можете посмотреть бесплатно What is Blessings | Tamil | Guru Mithreshiva или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மித்ரா: அருளை அடையும் பாதை! ஒருவர் எவ்வளவுதான் தன்னுடைய தொழிலில் கெட்டிக்காரராக இருந்தாலும் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து செயல்பட்டாலும் கூட இறையருள் இல்லையென்றால் வெற்றி சாத்தியம் இல்லை. உதாரணமாக, ஒருவருக்கு ஹோட்டல் தொழிலில் சகலமும் அத்துப்படி. எங்கே கடை போட்டால், எப்படி விலை வைத்தால் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கும் என்பதெல்லாம் கைவந்த கலை. ஆனால் இவை மட்டுமா வெற்றியை தீர்மானிக்கின்றன? வாடிக்கையாளருக்குப் பசியென ஒன்று வேண்டும். ருசி மீது நாட்டம் வேண்டும். ஹோட்டல் வரை வந்து செல்வதற்குப் போக்குவரத்து இருக்க வேண்டும். எல்லாம் போக வாடிக்கையாளரிடம் பில்லுக்குக் கொடுக்க பணம் இருக்க வேண்டும். ஒருவரின் அறிவு மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானித்து விடாது. தன் வெற்றியில் ஒரு சதவீதம்தான் சுய அறிவு. மீத 99% அருள் என்பதை வென்றவர்கள் அறிவார்கள். பிரபஞ்சத்தின் அருளைப் பெற்றவருக்கே புறச்சூழல் சரியாக அமைகிறது. வெற்றி குவிகிறது. சரி, பிரபஞ்சத்தின் அருளைப் பெறுவது எப்படி? ஒரே வழிதான் இருக்கிறது. தர்மம் செய்வது. தர்ம வழியில் செல்வது. தன் செல்வத்தைப் பகிர்ந்து ஆசியைப் பெற்றுக் கொள்வது. அஃதொன்றே வெற்றிக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குமான வழி. இப்புவியில் நிகழும் எதுவும் தற்செயலானதல்ல. அனைத்தும் காஸ்மிக் சட்டப்படி தர்மவழியின் படி நடக்கிறது. தர்மம் தலை காக்கும் எனும் நம் முன்னோர் சொல்லின் பொருள் விளங்குகிறதா? என் வீடு, என் குடும்பம், எனது பிள்ளைகள் என தன்னுடைய சொந்த நலனுக்காக மட்டுமே ஓடி ஓடி பொருளைச் சேர்த்துவிட்டு அருளைத் தேடாததன் விளைவே இன்று உலகம் பெருந்தொற்றின் பிடியில் அல்லல்பட காரணம். பலரும் கொரானா முடிந்துவிட்டது என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். முடிந்து விட்டது அரசு அறிவித்த லாக் டவுண் மட்டுமே. கொரானா அப்படியேதான் இருக்கிறது. பிரபஞ்சம் நம் முதுகில் ஒரு அடியை வைத்து ஜாக்கிரதை என எச்சரிக்கிறது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இனியும் சுதாரித்துக் கொள்ளவில்லையெனில் விளைவு இன்னும் கொடூரமாக இருக்கும். சரி, இந்நிலை மாற என்ன செய்யவேண்டும்? ஒவ்வொருவருவம் பகவானாக மாற வேண்டும். அதிர்ச்சி அடையாதீர்கள். பகவான் என்றால் கடவுள் என்று மட்டுமே பொருள் கொள்கிறீர்கள். தர்மத்தின் வழியில் நடந்து பிரபஞ்சத்தின் அருளைப் பெற்றவர்களுமே பகவான்தான். உங்கள் செல்வத்தின் சிறு பகுதியை வறியவர்களுக்குப் பகிர்ந்த அடுத்த நொடி நீங்கள் பகவான் ஆகிவிடுகிறீர்கள். நீங்கள் ‘பகவான்’ ஆவதற்கு உதவும் நோக்கில் குரு மித்ரேஷிவா உருவாக்கிய அற்புதத் திட்டம்தான் ‘மித்ரா’. கொரானாவினால் வாழ்வாதாரங்களை இழந்து உதவியை எதிர்நோக்கி இருக்கும் குடும்பங்களின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு மித்ரா தளத்தில் விபரங்கள் கொடுக்கப்படும். உதவ விரும்பும் நண்பர்கள் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து உதவலாம். ஒரு குடும்பம் பசியின்றி வாழத் தேவைப்படும் அத்யாவசிய பொருட்கள் நேரடியாக அவர்களிடம் சேர்ப்பிக்கப்படும். இந்தத் திட்டத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். இதன் மூலம் உங்கள் உதவி மிகச்சரியானவர்களுக்குக் கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் உதவ நினைப்பவர்கள் ஒரு குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை ஒரு மாதம் / இரண்டு மாதங்கள் / மூன்று மாதங்கள் என கால அளவைத் தேர்ந்தெடுத்து உதவமுடியும். உள்ளன்போடு உங்கள் நண்பர்களுக்கு ஒரு மித்திரனாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு உதவியும் உங்களை உச்சத்தில் வைக்கும். அவர்களின் மகிழ்ச்சியும் நமது மகிழ்ச்சியும் உருவாக்கும் நல்லதிர்வுகள் இந்த உலகத்தை நிச்சயம் மாற்றிவிடும். கொரானா மட்டுமல்ல எந்த ஒரு பேரழிவும் இந்த அற்புதமான உணர்ச்சிக்கு முன் ஒன்றுமில்லாது ஓடிவிடும். தர்மம் செய்வதால் உருவாகும் அருள் உங்களை ‘பகவான்’ ஆக மாற்றிவிடும் கோவையை தலைமையிடமாகக் கொண்ட தக்ஷிணா பவுண்டேசன் ஓர் ஆன்மீக மையம். அல்கெமி வகுப்புகளின் மூலம் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய மித்ரேஷிவா இந்த அமைப்பின் ஆன்மீக வழிகாட்டியாகவும் நிறுவனராகவும் உள்ளார். கோவையில் கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மித்ரா திட்டம் பலத்த வரவேற்பினைப் பெற்றது. ஆயிரக்கணக்கான ‘பகவான்கள்’ ஒன்றிணைந்து லட்சக்கணக்கான மித்திரன்களைப் பெற்றார்கள். இத்திட்டத்தின் அறிமுகவிழா வருகிற நவம்பர் 29-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. ஹோட்டல் லீலா பேலஸில் காலை 11 மணி அளவில் நடைபெறும் இந்நிகழ்வில் சென்னையின் பிரபலஸ்தர்கள், கொடையாளர்கள் பெருமளவில் கலந்துகொள்கிறார்கள். இந்நிகழ்வு யூட்யூபிலும் ஃபேஸ்புக்கிலும் நேரடியாக ஒளிபரப்பாகவும் இருக்கிறது. வாழ்க்கை சீராக சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு துன்பம் நேரிடுகையில் கோவிலுக்குச் செல்வது, வழிபாடுகள் செய்வது, ஜோதிடம் பார்ப்பது, பரிகாரம் தேடுவது நம் வழக்கமாக இருக்கிறது. இவையெல்லாம் துன்பம் வந்த பின் அல்ல. நன்றாக இருக்கும்போதே செய்யவேண்டியவை. ’பகவான்’ ஆக மாறி அருளைச் சேர்ப்பதும் இன்றே செய்ய வேண்டிய ஒன்று. ‘மித்ரா’வுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மேலும் விபரங்களுக்கு 0422 404 0406