У нас вы можете посмотреть бесплатно உலகம் சத்தியமா, அசத்தியoமா?...... или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நவம்பர் 06. வியாழன் உலகம் சத்தியமா, அசத்தியமா?...... உலகம் சத்தியமா அசத்தியமா என்று ஆராயும் முன் ஒருவன் தனது உண்மையை உணர வேண்டும். பார்ப்பவனின் சத்தியமே பார்க்கப்படும் பொருளின் சத்தியமாகும். தன்னை உணர்ந்த ஞானி பார்க்கும் உலகம் சத்தியம், பிரம்மம். —------------------------------------------------ IS THE WORLD TRUE OR FALSE? Before examining the WORLD whether it is TRUE OR FALSE, one must realise his own TRUTH. The truth of the SEER is the object SEEN. The WORLD SEEN by a WISE MAN who has realized HIMSELF is SATHIYAM, BRAHMAM. —---------------------------------------------- அத்வைத சித்தாந்தத்தை பின்பற்றும் சிலர் உலகம் சத்தியம் என்று கூறுகிறார்கள். அத்வைத கோட்பாடு இந்துமத தத்துவத்தில் இருக்கும் பிரதான சித்தாந்தம். இருப்பது இரண்டற்ற ஒரே வஸ்து. அதுவே பிரம்மம் என்பது இதன் மையக் கருத்தாகும். ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டு அல்ல. இரண்டும் ஒன்றே. பிரம்மமே சகல உயிர்களிலும் ஜீவாத்மாக விளங்குகிறது என்பது அத்வைதம். வேறு சித்தாந்தங்களை பின்பற்றுபவர்கள் சிலர் உலகம் அசத்தியம் என்று சொல்கிறார்கள். உலகம் சத்தியமா, அசத்தியமா? என்று விவாதிப்பதால் என்ன பயன்? அது கால விரையமும் சக்தி விரயமும் ஆகும். உலகம் ஜடம். அசத் வஸ்து. அதற்கு ஆதாரம் ஆத்மா. பகவான் ரமணர் உபதேச வுந்தியார் பாடலில் அசத் வஸ்துக்கள் எவை? என்று விளக்குகிறார். உடல் பொறி யுள்ள முயிரிரு ளெல்லாஞ் சடமசத் தானதா லுந்தீபற சத்தான நானல்ல வுந்தீபற உடல்,பொறிகள்,உள்ளம், அறியாமை,அகங்காரம், சித்தம் எல்லாம் அசத் வஸ்துக்கள்; அவைகள் சத் வஸ்துவான ‘நான்’ எனப்படும் ஆத்மா அல்ல. தோன்றி மறையும் மாறக்கூடிய அழியக்கூட எல்லாம் அசத் வஸ்துக்கள். நான் எனும் ஆத்மா தோன்றி மறையாத மாறாத சத் வஸ்து. உலகம் ஜட மையம் அதற்கு ஆதாரம் ஆத்மா. ஆத்மாவை முதலில் உணராமல் உலகத்தை வெறும் நாம ரூபமாக பார்த்தால் அது அசத்தியம். ஏனெனில் அதன் உயிரான ஆத்மா இல்லை. உலகிற்கு ஆதாரமான ஆத்மாவோடு பார்த்தால் அது பிரம்ம மயமாக தோன்றும். ஆத்ம உணர்வு இல்லாமல் பார்க்கப்படும் உலகம் பொன் இல்லாமல் செய்யப்பட்ட ஆபரணங்களுக்கு ஒப்பாகும். பொன்னே ஆபகரணங்களுக்கு உயிர், மதிப்பு. இதை பகவான் உள்ளது நாற்பது பாடலில் விளக்குகிறார். ஞானமாந் தானேமெய் நானாவா ஞானமஞ் அஞ்ஞானமாம் பொய்யாமஞ் ஞானமுமே -ஞானமாந் தன்னையன்றி யின்றணிக டாம்பலவும் பொய்மெய்யாம் பொன்னையன்றி யுண்டோ புகல். ஆத்ம ஞானம் ஒன்றே மெய்ஞானம். பிற ஞானம் எல்லாம் அஞ்ஞானம். அஞ்ஞானம் யாவும் பொய். அஞ்ஞானமும் ஞானம் அன்றி இல்லை. பொன் ஆபரணங்களுக்கு பொன்னையன்றி மதிப்பில்லை. அதுபோல ஆத்ம ஞானமன்றி உலகம் ஜடம். பார்க்கப்படும் பொருள் பார்ப்பவனுக்கு அன்னியமாக இருப்பதில்லை. பார்ப்பவனின் சத்தியமே பார்க்கப்படும் பொருளின் சத்தியமாகும். எனவே உலகைப் பார்க்கும் தான் யார்? என்று முதலில் ஒருவன் தன்னை அறிய வேண்டும் என்று பகவான் ரமணர் உபதேசிக்கிறார். நானா ரெனமனமுண் ணாடியுள நண்ணவே நானா மவன்றலை நாணமுற -நானானாத் தோன்றுமொன்று தானாகத் தோன்றினுனுநா னன்றுபொருள் பூன்றமது தானாய் பொருள். நான் யார்? என்னும் விசாரத்தால் மனம் அகமுகமாகி இதயத்தில் சேரவே, நான் எனும் அகங்காரத்தின் தலை சாயும். அவ்விடத்தில் ‘நான் நான்’ என்ற ஒரு வஸ்து தானாக தோன்றும். அப்படி தோன்றினாலும் அது அகங்காரம் அல்ல. அதுவே சத்வஸ்து; அது பூரணம்; ஆத்மாவின் உண்மை சொரூபம். ஆத்ம விசாரம் செய்து தன்னை யார்? என்று உணர்ந்த ஆத்ம ஞானியாலேயே உலகம் சத்தியம் என்று உணர முடியும். தன்னை உணராமல் உலகத்தை பார்ப்பது நான்கு குருடர்கள் யானையை பார்ப்பதற்கு ஒப்பாகும்; அது யானையின் முழுமையான உண்மை அல்ல. இதை பகவான் ரமண மகரிஷி ஒரு உள்ளத்தின் நாற்பது பாடலில் தருகிறார் என்று மெவர்கு மியல்பா யுளபொருளை யொன்று முளத்து ளுணர்ந்துநிலை- நினாறிடா துண்டின் றுருவருவென் றொன்றிரண் டன்றென்றே சண்டையிடன் மாயைச் சழக்கொழிக. எப்போதும் எல்லா உயிர்களிலும் அவரவர் தம் உண்மை உருவமாகவே இருக்கும் பொருளை அது இருக்கும் இடமான இதயத்தில் கண்டு அதுவாகவே உறுதியாக நிலை பெறாத சம்சாரிகள் அந்தப் பொருளை பற்றி வீண்விவாதங்களை செய்வார்கள். ‘அது உண்டு’, ‘அது இல்லை’, ‘அது ரூபம் உள்ளது’ ‘அது ரூபம் அற்றது’, ‘அது ஒன்று’ ‘அது இரண்டு’, ‘அது ஒன்றும் அன்று’ ‘இரண்டும் அன்று’, என்ற படியெல்லாம் சண்டையிடுவது அஞ்ஞான மயக்கம். எனவே தான் பகவான் ரமண மகரிஷி உலகம் சத்தியமா அசத்தியமா? என்று ஆராயுமுன் தன் சத்தியத்தை உணர ஆத்ம விசாரம் செய்ய வேண்டும் என்று உபதேசிக்கிறார். ஆத்மா சத்தியம் என்று உணர்ந்த ஞானிக்கு, உலகம் சத்தியம் பிரம்ம மயம். தனது உண்மையை உணராத அஞ்ஞானிக்கு எவ்வளவு சாஸ்திர ஞானங்கள் இருந்தாலும் உலகம் அசத்தியம். “ஓம் தத் சத்” —-----------------------------------------------