У нас вы можете посмотреть бесплатно அகஸ்தீஸ்வரர் பதிகம் - திரு சிவ சூரியநாராயணன் 21-06 2013-திரு பொரும்பூர் சிவராமன் ராஜகோபாலன் 25-02-25 или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பொரும்பூர் அகஸ்தீசுவரர் பதிகம் . ஜூன் 21- 2013 கும்பாபிஷேகத்தன்று கல்யாண உற்சவ நேரத்திலே திரு சிவ சூரியநாராயணன் அவர்கள் இயற்றியது. கொல்லிப்பண்ணிலே (நவரோஜராகத்திலே) பாடல் பதிவு செய்யப்பட்ட நாள் 25-02-2025. பொரும்பூர் சிவராமன் ராஜகோபாலன் . ********************************** அமிர்தானந்தவல்லி சமேத அகத்தீசுவரர் ஆலயம் மயிலாடுதுறை திருவாரூர் மார்க்கத்திலே மங்கைநல்லூரை அடுத்த கள்ளிவாசலில் இருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பொரும்பூர் என்னும் எங்கள் கிராமம் . இலுப்பை மரங்கள் நிறைந்த தாருகாவனமாக இருந்தது. சரக்கொன்றை பூத்துக் குலுங்கிய கிராமமாகவும் இருந்தது . ******************************** கொன்றை மரம் பூத்தெங்கும் குலுங்கக் காணும் குளிர் சோலை சூழ்ந்துள்ள பொரும்பூர் தன்னில் அன்று முதல் இன்று வரை வாழ்வோர்க்கெல்லாம் ஆனந்தம் அமைதியென வழங்குகின்ற புன்முறுவல் உதிக்கின்ற அழகுத் தேவி புரந்தருளும் அமிர்தானந்த வல்லி அம்மை அன்பொழுகச் சேர்ந்தகத்தில் உறையும் தெய்வம் அகத்தீசுவரர் அடிகள் போற்றி போற்றி ! - (1) பண்டைநாள் பண்ணிவைத்த கோயில் தன்னைப் பக்தியுடன் மறுபடியும் கட்டுகின்ற புண்ணியங்கள் பெருக்குகின்ற பணியை எம்மைப் போதெல்லாம் புகழோதிச் செய்யவைத்த கண்ணுதலான் கருணையினை கண்ணீர் மல்கக் காதலுடன் கவிதையிலே போற்றச் செய்த அண்ணலெங்கள் அகத்தினிலே வளரும் தெய்வம் அகத்தீசுவரர் அடிகள் போற்றி போற்றி ! - (2) வாழையடி வாழையென எங்கள் வம்சம் வளர்ந்திங்கு வளர்ப்புமுடன் வாழவென்றே ஊழதுவும் எமக்கின்று துணையாயாகி உடன் வந்து உதவுவணம் செய்த தெய்வம் ஏழிகளே பொரும்பூரில் இல்லாதாகி என்றென்றும் வாழ்கின்ற நிலையை ஈயும் ஆயுசுவே உலகக்காய் நஞ்சை உண்ட அகத்தீசுவரர் அடிகள் போற்றி போற்றி ! - (3) உதிக்கின்ற சங்கதிரோ நித்தநித்தம் ஓடிவந்து பணிந்தண்ணல் அருளை மாந்தர் துதிக்கின்ற புகழுடைய பொரும்பூர் தன்னில் தூயோமாய் வந்துள்ளோம் குடிகள் எல்லாம் பதிக்கெல்லாம் பதியான அறநார் கோயில் பல்லாண்டு கழிந்தின்று புதிதாய்தத் தோன்ற அதைக் கண்டு எமைமறந்து சொல்லுகின்றோம் அகத்தீசுவரர் அடிகள் போற்றி போற்றி ! (4) முன்னரிந்த நல்லூரில் வாழ்ந்தோரெல்லாம் முக மலர்ந்து தாள்பணிந்து முடிந்ததெல்லாம் இன்பமுடன் செய்ததெல்லாம் ஈசனாரின் இன்னருளே யன்றி வேறொன்றில்லையென்றே மன்னுலகில் வருநாளும் பேசுவார்கள் மாலையனும் காணாத மாமலையான் அன்புவெள்ளம் தனிலாழ்ந்து சொல்லுவார்கள் அகத்தீசுவரர் அடிகள் போற்றி போற்றி ! - (5) பழகு தமிழ் மொழியினிலே அப்பர் அன்று பாடிவைத்த பெருமைமிகு சிற்றூர் தன்னில் முழவெனவே இடியொலிக்க மேகக் கூட்டம் மும்மாரி இனியென்றும் பொழியும் வண்ணம் வழங்குகின்ற அருளாலே வளமை பொங்க மக்களெல்லாம் இன்புடனே வாழுகின்ற அழகான பொரும்பூரில் வளரும் தெய்வம் அகத்தீசுவரர் அடிகள் போற்றி போற்றி ! - (6) குயிலினங்கள் பொரும்பூரில் கூவச் செய்யும் குடும்பத்தில் இன்பங்கள் மேவச்செய்யும் மயிலினங்கள் அழகாக ஆடச் செய்யும் மரமெல்லாம் மகிழ்ச்சியிலே பாடச் செய்யும் வயலிலெல்லாம் பசுமைநிறம் சேரச்செய்யும் மழை பொழிந்து ஆற்றில் நீர் ஓடச் செய்யும் அயில் முருகன்தனை ஈந்த தெய்வமாகும் அகத்தீசுவரர் அடிகள் போற்றி போற்றி ! - (7) தொடக்கத்தில் சூரியனும் நிலவும் நிற்க தொழுவோருக்கு நலமருளும் தும்பிக்கையான் இடப்பக்கம் இருந்தருள வலதுபக்கம் எழில் முருகன் தேவியர்கள் உடனிருக்க அடுத்தங்கே இலக்குமியாள் அழகு சேர்க்க அருவி சண்டிகேசுவரர் அமர்ந்திருக்க தடுத்தருள பைரவரும் துர்கையோடு தன்னருளைப் பொழிகின்ற கோயில் இங்கே ! - (8) இடுக்கண்கள் இனி நம்மை எட்டாதாக்கும் இறையவனின் இன்னருளை பெற்றளிக்கும் இடபமெதிர் இருக்கையிலே எழிலார் அம்மை இணை விழிகள் நலமருள அருகிருக்க கொடுக்கின்ற தெய்வமென ஊரார் என்றும் கொண்டாடும் பொரும்பூரில் நிலையாய் நின்றே அடுத்தடுத்து நன்மைகள் அளிக்கும் ஈசன் அகத்தீசுவரர் அடிகள் போற்றி போற்றி ! - (9) திங்கள் நதி சூடி வரும் தேவன் காணத் திரளாக வருகின்ற அடியார் கூட்டம் மங்கலங்கள் பெற்றென்றும் வாழவென்று வழியெல்லாம் பொறுப்புடனே காவல் செய்ய மங்கையர்கள் எழுவருடன் செல்லியம்மன் மணிகண்ட சாஸ்தாவும் கோவில் கொள்ள அங்கமெல்லாம் திருநீற்றைப் பூசும் தெய்வம் அகத்தீசுவரர் அடிகள் போற்றி போற்றி ! ( 10) *********************************