У нас вы можете посмотреть бесплатно முக்திநாத் யாத்ரா 2025 /நேபால் / மனோகாம்னா ஷக்தி பீடம்/ MUKTHINATH YATRA / ep 5 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் சேகர் இன்னைக்கி நாம மிக முக்கியமான மனதுக்கு பிடிச்ச நீண்ட வருட கனவாகிய விஷ்ணுவின் அவதாரமாகிய பெருமாள் வீற்றிருக்கும் முக்திநாத் போக போறோம். இப்போ போக்ராவில் இருந்து ஜோம்சோம் வழியாக முஸ்டாங் வேலியில் அமைந்துள்ள முக்திநாத் க்ஷேத்ரத்துக்கு போறோம். நாங்க நாலு பேருக்கு ஒரு கார் என ஏழு கார்கள் புறப்படுகிறது . இந்த ட்ரிப்பில் வழிநெடுகில் பார்க்க வேண்டிய இயற்கை எழில் மிகுந்த காட்சிகள், நதிகள், பச்சைப்பசேல் புள் வேலிகள், அருவிகள் மற்றும் ஹிமாலய மலைத்தொடர்கள் என கண்களுக்கும் மனதுக்கும் விருந்து கொடுத்துக்கொண்டே பிரயாணம் செய்யலாம். இந்த பிரயாண தூரம் 174 கிலோமீட்டரே பிரயாண நேரம் 5 டு 6 மணிநேரம். ஆனால் நேரம் போவது தெரியாது காரணம் இயற்கை எழில் வழி நெடுகிலும் உள்ளதால். நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும். மரணத்திற்குப் பிறகு முக்தி அல்லது மோட்சம் பெறுவதற்காக பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இந்துக்கள் விஷ்ணுவையும், பௌத்தர்கள் அவலோகிதேஸ்வரரையும் இங்கு வணங்குகின்றனர். வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் 105வது திவ்ய தேசமாகும். திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். ஆண்டின் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாகும். முக்திநாத்தில் பாயும் கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை, வைணவர்கள் நாரயாணனின் அம்சமாக கருதி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள் கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது. எனவே முதலில் காட்மாண்டிலிருந்து, பொக்காராவை அடைந்து, அங்கிருந்து வான் வழியாக ஹெலிகாப்டர் அல்லது சிற்றுந்து மூலம் முக்திநாதரை தரிசிக்கலாம். போகராவிலிருந்து முக்திநாத் செல்லும் வழியில் ராணிபௌவா, ஜோர்கோட், ஜார்கோட், சோங்கூர், காக்பெனி அல்லது ஜோம்சோம் ஆகிய இடங்களில் தங்க வசதியுள்ளது. சிற்றுந்து மூலம் காத்மாண்டிலிருந்து 377 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்திநாத் கோயிலை அடைய 10 மணி நேரமாகும். காத்மாண்டிலிருந்து வான் வழியாக 194 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அருகாமையில் மிக உயரமான புத்தர் சிலையும் அதற்கு அருகாமையில் ஜவாளாமாய் ஷக்தி பீடம் கோயிலும் உள்ளது. அவசியம் பார்க்க தவற வேண்டாம். முழு வீடியோவையும் பார்க்கவும் மிகவும் அற்புதமாக இருக்கும் மேலும் பச்சைப்பசேல் காட்சிகள், பசுமையான ஹிமாலய மலைத்தொடர் மற்றும் அருவிகள். இந்த வீடியோ பிடித்திருந்தால் ஒரு லைக் , ஷேர் செய்வதுடன் சப்ஸ்க்ரைப் (subscribe )செய்யவும் நன்றி ஓம் நமசிவாயா அடுத்தடுத்து வரும் விடியோவை பாருங்க மற்றும் கீழே முந்தின எபிசொட் லிங்க் கொடுத்துள்ளேன் அவசியம் பார்க்கவும். • Mukthinath Yathra 2025/Nepal /நேபாளத்தில் ... • Mukthinath Yathra 2025/Nepal /நேபாளத்தில் ... • Mukthinath Yathra 2025/Nepal /நேபாளத்தில் ... • முக்திநாத் யாத்ரா 2025 /நேபால் / மனோகாம்னா... மேலும் காட்மாண்டுவிலிருந்து முழு சாலை பிரயாணத்தயும் கண்டு கழிக்க தாங்கள் அணுகவேண்டிய யூடுபே சேனல் OSS (OOR SUTHALAAM SEKHARUDAN ) ஒரு லிங்க் கீழே கொடுத்துள்ளேன் அவசியம் கிளிக் செய்து பார்த்த லைக் , ஷேர் செய்யவும் • Road trip Chennai to Bangaluru by car ep 1