У нас вы можете посмотреть бесплатно 🛑PART-4🛑 TPT , Tamil(Pulavar) , B.Lit., 🛑 8 BT நியமன ஆணை или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
🛑 கவனம்: TPT , Tamil(Pulavar) , B.Lit., 🛑 8 TPT நபர்களுக்கு மட்டும் தளர்வு அளித்து BT தமிழ் நியமன ஆணை வெளியீடு 🛑 அரசாணை (நிலை) எண். 268 Date : 20.Nov.2025 https://primetrace.com/group/971572/p... பள்ளிக்கல்வித்[ப.க.3(2)] துறை அரசாணை (நிலை) எண். 268 Date : 20.11.2025 Pulavar (3 Years), TPT Training, B.Lit. தகுதிகளுக்கு மட்டும் அரசு வழங்கிய பிரத்தியேக தளர்வு குறித்து முழு விளக்கம். இந்த அரசாணை மூலம் மற்ற TPT ஆசிரியர்கள் தளர்வு கேட்க முடியுமா? ஏன் இந்த மூன்று தகுதிகளுக்கு மட்டும் அனுமதி? அரசாணை உண்மை, தகுதி நிபந்தனை, TPT Teachers clarification — அனைத்தும் தெளிவாக! மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின்படி, பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் (BT/BRTE)-2023 தேர்விற்கு 1) Pulavar (Title) (மூன்று ஆண்டுகள்). 2) தமிழ் பண்டிதர் பயிற்சி 3) இளங்கலை இலக்கியம் (B.Lit.,), தமிழ் பண்டிதர் பயிற்சி கல்வித் தகுதியை பெற்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த 4 நபர்கள் மற்றும் இதர 4 நபர்கள் ஒத்த நபர்களாக கருதப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட நிலையில், இந்த 8 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் அரசை கேட்டுக் கொண்டுள்ளார். 3. மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் மறு வெளியீடு செய்யப்பட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி சிறப்பு விதிகளில் விதி 6இல் இணைப்பு |இல் Class II (Graduate Teacher -Tamil)இல் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியை நிறைவு செய்யாத நிலையில், வழக்கு எண்கள் W.P.No.16228/2024, 15483/2024 0 14823/2024-ण 08.07.2024 நாளிட்ட மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாணையை செயல்படுத்தும் பொருட்டு, பட்டதாரி ஆசிரியர் /வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர் (BT/ BRTE 2023ம் ஆண்டிற்கு போட்டி தேர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 8 பணிநாடுநர்கள் (வழக்கு தொடுத்த நபர்கள் 4 மற்றும் இதர ஒத்த நபர்கள் 4) பொருட்டு. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016, பிரிவு 58-ல் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி சிறப்பு விதிகளில் விதி 6இல் இணைப்பு |இல் Category 2, Class II Sub rule (ii)-க்கு தளர்வளித்து, இதனை இதர நபர்கள் மேற்கோள் காட்டக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில், கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள 8 பணிநாடுநர்களுக்கு பணிநியமனம் வழங்க பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது:- பள்ளிக்கல்வி பட்டதாரி ஆசிரியர் / வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர் (BT/BRTE) 2023ஆம் ஆண்டிற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வு மூலம் தெரிவு பெற்ற தமிழ் பண்டிதர் பயிற்சி (TPT) பெற்ற 8 பணிநாடுநர்களுக்கு விதித்தளர்வு மேற்கொண்டு தமிழ் பட்டதாரி ஆசிரியர்களாக பணிநியமன ஆணை வெளியிடப்படுகிறது. வழங்க அனுமதி வழங்குதல் ஆணை. ஆணை:- திருமதி. ஆர்.கலைவாணி. ஏ.தேவி மற்றும் எம்.பி.சுதாகர் ஆகியோரால் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.3/2023ன்படி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) நியமனத்திற்கு தகுதியானவர் என்று ஆணையிடுமாறு கோரி தொடரப்பட்ட வழக்கு W.P.No.16228, 15483 மற்றும் 14823/2024-ன் மீதான மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் 08.07.2024 நாளிட்ட தீர்ப்பாணையில் கீழ்க்கண்டவாறு ஆணை வழங்கப்பட்டுள்ளது:- "xxx xxx xxx மனுதாரர் எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றிருந்தால், தேர்வு செயல்முறையைத் தொடர பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்படுகிறது". #TPT #Pulavar #TamilPandithar #BLit #TPTRelaxation #GOTamil #EducationNews #TeacherUpdate #TNTeachers #TamilNaduGovernment #TNGovtOrder #AAYESHAACADEMY