У нас вы можете посмотреть бесплатно தைப்பூசம் 2026-விரத முறை பால் குடம் எடுக்கும் முறை , வழிபாட்டு முறை или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருப்பரங்குன்றம் சந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலந் துஞ்சித் திரியாதே கந்தனென்று என்று உற்று உனைநாளும் கண்டுகொண்டு அன்புற்றிடுவேனோ தந்தியின் கொம்பை புணர்வோனே சங்கரன் பங்கிற் சிவைபாலா செந்திலங் கண்டிக் கதிர்வேலா தென்பரங் குன்றிற் பெருமாளே திருச்செந்தூர் இயலிசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே உயர்கருணை புரியும் இன்பக்கடல் மூழ்கி உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே மயில் தகர்கல் இடையர் அந்தத் தினைகாவல் வனசகுற மகளை வந்தித்து அணைவோனே கயிலைமலை அனைய செந்தில் பதிவாழ்வே கரிமுகவன் இளைய கந்தப் பெருமாளே பழனி அபகார நிந்தைபட்டு உழலாதே அறியாத வஞ்சரை குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ? இபமா முகன் தனக் கிளையோனே இமவான் மடந்தை உத்தமிபாலா ஜெபமாலை தந்த சற் குருநாதா திருவாவினன் குடி பெருமாளே. சுவாமிமலை சரண கமலாலயத்தில் அரை நிமிஷ நேர மட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத ஜட கசட மூட மட்டி பவ வினையிலே சனித்த தமியன் மடியால் மயக்கம் உறுவேனோ? கருணை புரியாதிருப்ப தென குறை இவேளை செப்பு கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே கடக புயமீதி ரத்ன மணியணி பொன்மாலை செச்சை கமழு மணமார் கடப்பம் அணிவோனே தருணம் இதையா மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு தகைமை சிவ ஞான முத்தி பரகதியு நீகொடுத்(து) (உ)தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா அருணதள பாத பத்மம் அதுநிதமுமே துதிக்க அரிய தமிழ் தானளித்த மயில்வீரா அதிசயம் அனேகம் உற்ற பழனிமலை மீதுதித்த அழக, திருவேரகத்தின் முருகோனே திருத்தணி சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் செகுத்தவர் உயிர்க்கும் சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென்று அறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கரு வறுக்கும் பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புகழ் உரைக்குஞ் செயல்தாராய் தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந்தன பேரி தடுட்டுடு டுடுட்டுண் டென துடி முழக்கும் தளத்துட னடக்கும் கொடுசூரர் சினத்தையும் உடற்சங் கரித்தம லைமுற்றும் சிரித்தெரி கொளுத்தும் கதிர்வேலா தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்து எண் திருத்தணி யிருக்கும் பெருமாளே. பழமுதிர்சோலை வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமது ஒழிந்து தெளியேனே மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம் அணிந்து பணியேனே ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று தெரியேனே ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது ஆடுமயி லென்பது அறியேனே நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம் அலைந்து திரிவேனே நாகம் அணிகின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று தொழுகேனே சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து எனையாள்வாய் சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற பெருமாளே. கந்தர் அலங்காரம் விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே. கந்தர் அனுபூதி உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! கந்தர் அந்தாதி சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற் சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற் சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன் சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே