У нас вы можете посмотреть бесплатно திருவெண்டுறை - ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன் - திருஞானசம்பந்தர் தேவாரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
03.061 திருவெண்டுறை | ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன் | திருஞானசம்பந்தர் தேவாரம் | #ThiruneriyaThamizhosai #VanduraiNatharTemple | #Thiruvanduthurai | #Vanduthurainathar | #Thirugnanasambandhar | #Thevaaram திருவெண்டுறை தற்போது திருவண்டுதுறை என்று வழங்குகிறது. பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனின் திருமேனியின் இடையில் துளைத்துச் சென்று அவரை மட்டும் வலம் வந்தமையால், அம்பிகை சாபம் தர, வண்டு உருவில் இருந்து இங்கு வழிபட்டார் என்பது வரலாறு. இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வெண்டுறைநாதர், ஸ்ரீ மதுவனேஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சத்யதாயதாக்ஷி, ஸ்ரீ பிரஹதாம்பாள் திருமுறை : மூன்றாம் திருமுறை 061 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள் பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சிவபெருமான் யமனை உதைத்தது, திரிபுரம் எரித்தது, இராவணன் கயிலை மலையை எடுத்தது, திருமால் பிரம்மா அடிமுடி காண முடியாமல் அரிதாய் விளங்கியது முதலிய புராண வரலாறுகள் இப்பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இறைவனின் பெருமையைக் கூறி ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் இறைவன் விரும்பும் இடம் திருவெண்டுறை என்று நிறைவு செய்கிறார். 00:13 ஆதியன் ஆதிரையன் அனலாடிய ஆரழகன் பாதியோர் மாதினொடும் பயிலும் பரமாபரமன் போதியலும் முடிமேல் புனலோடு அரவம் புனைந்த வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே. ..... (01) 04:27 காலனை ஓர் உதையில் உயிர் வீடு செய் வார்கழலான் பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன் மாலை மதியொடு நீர் அரவம் புனை வார்சடையான் வேலன கண்ணியொடும் விரும்பும் இடம் வெண்டுறையே. ..... (02) 06:47 படை நவில் வெண்மழுவான் பல பூதப்படை உடையான் கடை நவில் மும்மதிலும் எரியூட்டிய கண்ணுதலான் உடை நவிலும் புலித்தோல் உடை ஆடையினான் கடிய விடை நவிலும் கொடியான் விரும்பும் இடம் வெண்டுறையே. ..... (03) 08:04 பண்ணமர் வீணையினான் பரவிப் பணி தொண்டர்கள் தம் எண்ணமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவு அரியான் பெண்ணமர் கூறுடையான் பிரமன் தலையில் பலியான் விண்ணவர் தம்பெருமான் விரும்பும் இடம் வெண்டுறையே. ..... (04) 09:25 பார் இயலும் பலியான் படி யார்க்கும் அறிவு அரியான் சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான் போர் இயலும் புரம் மூன்றுடன் பொன்மலையே சிலையா வீரியம் நின்று செய்தான் விரும்பும் இடம் வெண்டுறையே. ..... (05) 10:18 ஊழிகளாய் உலகாய் ஒருவர்க்கும் உணர்வு அரியான் போழிள வெண்மதியும் புனலும் அணி புன்சடையான் யாழின் மொழி உமையாள் வெருவ எழில் வெண்மருப்பின் வேழம் உரித்த பிரான் விரும்பும் இடம் வெண்டுறையே. ..... (06) 11:07 கன்றிய காலனையும் உருளக் கனல் வாய் அலறிப் பொன்ற முன்நின்ற பிரான் பொடி ஆடிய மேனியினான் சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான் புலன்கள் வென்றவன் எம் இறைவன் விரும்பும் இடம் வெண்டுறையே. ..... (07) 12:42 கரம் இரு பத்தினாலும் கடுவெஞ் சினமாய் எடுத்த சிரம் ஒரு பத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான் பரவ வல்லார் வினைகள் அறுப்பான் ஒருபாகமும் பெண் விரவிய வேடத்தினான் விரும்பும் இடம் வெண்டுறையே. ..... (08) 14:07 கோல மலர் அயனும் குளிர் கொண்டல் நிறத்தவனும் சீலம் அறிவு அரிதாய்த் திகழ்ந்து ஓங்கிய செந்தழலான் மூலமதாகி நின்றான் முதிர் புன்சடை வெண்பிறையான் வேலை விடமிடற்றான் விரும்பும் இடம் வெண்டுறையே. ..... (09) 15:25 நக்குருவாய வரும் துவர் ஆடை நயந்து உடையாம் பொக்கர்கள் தம் உரைகள் அவை பொய்யென எம் இறைவன் திக்கு நிறை புகழார் தரு தேவர்பிரான் கனகம் மிக்கு உயர் சோதி அவன் விரும்பும் இடம் வெண்டுறையே. ..... (10) 16:56 திண்ணமரும் புரிசைத் திருவெண்டுறை மேயவனை தண்ணமரும் பொழில்சூழ் தரு சண்பையர் தம் தலைவன் எண்ணமர் பல்கலையான் இசை ஞானசம்பந்தன் சொன்ன பண்ணமர் பாடல் வல்லார் வினையாயின பற்று அறுமே. ..... (11) பதிகப் பலன் : உறுதியான மதில்களையுடைய திருவெண்டுறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றி, குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த சண்பை எனப்படும் சீகாழியில் அவதரித்த தலைவனான, பலகலைகளில் வல்ல ஞானசம்பந்தன் அருளிய இப்பண்ணோடு கூடிய திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் வினையாவும் நீங்கும். ஆலய முகவரி : அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோவில், திருவண்டுதுறை, திருவண்டுதுறை அஞ்சல், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம், PIN - 614 717. எப்படிப் போவது : மன்னார்குடியில் இருந்து கிழக்கே 10 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் வீராக்கி என்ற இடத்தில் இறங்கி இத்தலத்தை அடையலாம். மன்னார்குடி - வீராக்கி செல்லும் நகரப் பேருந்துகள், மன்னார்குடி - சேந்தங்குடி செல்லும் நகரப் பேருந்துகள் வண்டுதுறை வழியாகச் செல்கின்றன. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"