У нас вы можете посмотреть бесплатно மாயை வந்திருக்கிறதா?HAS ILLUSION COME? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நவம்பர் 15. சனி மாயை வந்திருக்கிறதா? தன்னை உணர்ந்த ஞானிக்கு மாயை என்பது கிடையாது. அகந்தை உணர்வாக தன்னைக் காணும் அஞ்ஞானிக்கே மாயை வந்ததும் போவதும். ஆத்ம சொரூபம் தோன்றி மறையாத என்றும் உள்ளது. —------------------------------------------------ HAS ILLUSION COME? For the WISE MAN who has realized HIMSELF there is no ILLUSION.For the IGNORANT MAN who sees HIMSELF as a BODY, ILLUSION comes and goes. The SELF is EVER PRESENT without appearance and disappearance. —----------------------------------------------- ஞானிகள் மாயை வந்ததாகவோ இருப்பதாகவோ ஒப்புக் கொள்வதில்லை. தான் யார் என்று தன்னை உணர்ந்த ஞானிகளுக்கு மாயைப் பற்றிய கவலை இல்லை. அஞ்ஞானிகளே மாயை இருப்பதாக கூறுகிறார்கள். இருப்பதாக கூறும் அவர்கள் தான் அதை நிரூபிக்க வேண்டும். மாயை என்பது இல்லாத ஒன்று. அதாவது இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் காண்பதே மாயை. மங்கிய மாலை வேளையில் நடந்து செல்லும் போது வளைந்து ஒரு கயிறு கிடக்கிறது. அதைப் பார்த்தவுடன் மனதில் பாம்பு தோன்றி பயம் உண்டாகிறது. அங்கு இல்லாத பாம்பு நமக்கு இருப்பது போல் தோன்றுகிறது. பெரிய யானையின் காதை தடவிப் பார்த்த குருடனுக்கு அது பெரிய முறம் போல் தோன்றுகிறது. இருக்கின்ற யானையின் காது இல்லாத முறமாக பார்க்கிறான். இவ்வாறு இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் செய்யப்படும் நம் கற்பனை மாயை எனப்படும். ‘அதை அதை’ அவ்வாறே திரிபு இல்லாமல் பார்ப்பது மெய்ஞானம்.மெய்யுணர்ந்த ஞானிகள் கற்பனையின்றி உள்ளதை உள்ளவாறு பார்க்கின்றனர். பகவான் ரமண மகரிஷி மாயைப்ற்றிய கேள்வி எழுப்பும் நீயே மாயை. எனவேதான் நீ அந்த கேள்வியை எழுப்புகிறாய். தேகாபிமானியான நீ யார்? என்று ஆத்ம விசாரம் செய்தால் கேள்வி கேட்பவன் இருப்பற்று மறைந்து விடுவான். உள்ளது நாற்பது பாடலில் இதை விளக்குகிறார் பகவான். நானா ரெனமனமுண் ணாடியுள் நண்ணவே நானா மவன்றலை நாணமுற -நானானாத் தோன்றுமொன்று தானாகத் தோன்றினுநா னன்றுபொருள் பூன்றமது தானாம் பொருள். கேள்வி எழுப்பி எழுச்சி உணர்வாக கிளம்பும் தான் யார்? என்று மனதின் உள்நாடி இதயம் சேரவே, நான் என்ற அகந்தை உணர்வுக்கு சொந்த இருப்பு இல்லாததால் அதன் தலை ஆத்மாவில் சாய்ந்து விடும். அது ஒடுங்கி இடத்தில் ‘நான் நான்’ என்று நித்தியமான ஒரு வஸ்து ஒளிரும். அது தோன்றினும் அதுவே பூரணமான தோன்றி மறையாத நித்தியமான வஸ்து எனப்படுவது. மாயைப் பற்றிய கேள்வி எழுப்பும் அகந்தை உணர்வு ஒரு மாயாவி. உறக்கத்தில் மறைந்து விழிப்பில் தோன்றும் பொய் தோற்றம். அது யாது? என்று நாடினால் அதன் நிலையான இருப்பான இதயத்தில் மறையும். மாயாவியான அகந்தை மாயை பற்றிய பிரச்சனையை எழுப்புகிறது. அகந்தை ‘இந்த உடல் நான்’ என்ற ஒரு எண்ணத்தை பற்றி கொண்டு தான் எழும்; வாழும் மறையும். அது யாது? என்று பார்க்காத வரை ‘நான் நான்’ என்று ஆணவ ஆட்டம் போடும். தான் யார்? என்ற உண்மை அறியாத அஞ்ஞானி அகந்தை. பகவான் ரமணர் வேறொரு உள்ளது நாற்பது பாடலில் அஞ்ஞானிக்கும் ஞானிக்குமான பேதத்தை விளக்குகிறார். உடனானே தன்னை யுணரார்க் குணர்ந்தார்க் குடலளவே நான்ற னுணரார்க்-குடலுள்ளே தன்னுணர்ந்தார்க் கெல்லையறத் தானொளிரு நானிதுவே யின்னவர்தம் பேதமென வெண்ணுவாய். உடல் ஆத்மா, தன்னை உணராத அஞ்ஞானிக்கும் தன்னை உணர்ந்த ஞானிக்கும். அஞ்ஞானிக்கு உடலே ஆத்மா. உடலுள்ளே இதயத்தில் ஆழ்ந்து எல்லையற்று பிரபஞ்சம் முழுவதும் ஒளிரும் ஆத்மா தன் சொரூபம் என்று உணர்ந்தவன் ஞானி. இதுவே இருவருக்குமான பேதம் என்பதை உணர்வாயாக. ஆத்ம ஞானம் இல்லாதவன் அஞ்ஞானி. அவன் நிலையில்லாத அழியக்கூடிய உடலை நான் என்று அபிமானிக்கிறான். பாரதப் போரில் அர்ஜுனன், உடலை ஆத்மாவாகவும், தான் தன் உறவினர்களை கொல்லப் போவதாகவும் தவறாக எண்ணினான். இதுவே மாயை, அறியாமை. அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் ஆத்மஞானம் உபதேசம் செய்தார். என்றும் இருப்பது ஆத்மா ஒன்றே. சாதகத்திற்கு முன்பும், சாதகத்தின் போதும், சாதகத்தின் முடிவிலும் எப்போதும் உள்ளது ஆத்மா. அது இல்லாத காலம் என்பது ஒன்று இல்லை என்பதற்கு தசமன் கதையை கூறுவார் பகவான் ரமணர். பத்து பேர் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்த ஒரு ஆற்றைக் கடந்தார்கள். கடந்தபின் எண்ணினால் ஒன்பதுதான் கணக்கு வந்தது. எண்ணியவன் தன்னை விட்டு எண்ணினான். வழிப்போக்கன் ஒருவன் அவனையும் சேர்த்து எண்ணி பத்து பேரும் இருப்பதை அவர்களுக்கு உணர்த்தினான். ஆற்றை கடக்கும் முன்பும் பத்து பேர், கடக்கும் போதும் பத்து பேர், கடந்த பின்பும் பத்து பேர்தான். தன்னை உணர்ந்த ஞானிக்கு மாயை என்பது கிடையாது. ஒருவனா முன்னை யொளித்தெவர் வருவா ருனசூ தேடியது வருணாசலா! “ஓம் தத் சத்” —----------------------------------------------