У нас вы можете посмотреть бесплатно பிறவாமை இறவாமை BIRTHLESSNESS IMMORTALITY или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நவம்பர் 03. திங்கள் பிறவாமை இறவாமை பிறவி ஒரு நோய். பிறவிக்கு காரணம் நான் இந்த உடல் எனும் தேகாத்ம புத்தி. தன்னை யார் என்று உணர்ந்து தேகாத்ம புத்தி எழாமல் செய்வதே இறவாமை. தன்னை உணர்ந்த ஞானி இறவா நிலை எய்தியவர். —------------------------------------------------- BIRTHLESSNESS IMMORTALITY BIRTH is a DISEASE. The cause of the BIRTH is the misunderstanding of I AM THE BODY . IMMORTALITY is the realisation of ONESELF as WHO AM I and prevention of the thought I AM THE BODY.. A WISE MAN who has realized HIMSELF has attained the state of IMMORTALITY. —------------------------------------------------ உயிர்கள் தோன்றுகின்றன; மறைகின்றன. இது முடிவில்லாத தொடர் கதையாக இருக்கிறது. மனிதப் பிறவியில் மாத்திரமே தொடர் கதைக்கான முடிவு காணமுடியும் என்று ஞானிகள் கூறுகின்றனர். உடம்பு பிறக்கிறது. இறக்கிறது. குழந்தை பிறக்கும்போது சந்தோஷப் படுகிறோம்; இறப்பில் துக்கப் படுகிறோம். சாதாரண மனிதர்களான நம்மால் இரண்டையும் சமமாக பார்க்க முடியவில்லை. நமக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் இறந்து விட்டால் அதற்கு நாம் துன்பப்படு வதில்லை. நாம் கொண்டுள்ள பந்தபாசம், உறவு, சந்தோஷம் படவும் துக்கப்படவும் செய்கிறது. பிறவி ஒரு நோய் என்று ஞானிகள் கூறுகின்றனர். நிரந்தரமாக அந்த நோயிலிருந்து விடுதலை பெற்று பிறவாத நிலை எய்துவது எவ்வாறு?. அதுதானே மனிதப் பிறவியின் குறிக்கோள். நான் இந்த தேகம் என்னும் “தேகாத்ம புத்திக்கு” இடம் கொடுக்காமல் இருப்பதே பிறவாமை யாகும். “தேகம் நான் அல்ல” என்ற விவேகம் வரவேண்டும். இதை வடமொழியில் “தேகம் நாஹம்” என்று சொல்வார்கள். பகவான் கிருஷ்ணர் கீதையில் அர்ஜுனனுக்கு “நீ அந்த உடல் அல்ல. அழிவில்லாத ஆத்மா நீ” என்று ஆத்ம உபதேசம் செய்கிறார். ஆனால் பந்தபாசத்தால் குழம்பி இருந்த அர்ஜுனன்ல் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் தன்னை ஒரு உடலாக கருதியதால் (தேகாத்ம புத்தி) தான் எதிரிகளை கொல்லப் போவதாக எண்ணி கலங்கினான். விஜயன் போன்றே அஞ்ஞானிகளான நாமும் அழியப் போகும் உடலை ஆத்மா என்று எண்ணி மரண பயம் கொள்கிறோம். பகவான் ரமண மகரிஷி அஞ்ஞானிக்கும் ஞானிக்குமான வேற்றுமையை உள்ளது நாற்பது பாடலில் நமக்கு அளிக்கிறார் உடனானே தன்னை யுணரார்க் குணர்ந்தார்க் குடலளவே நான்ற னுணரார்க்-குடலுள்ளே தன்னுணர்ந்தார்க் கெல்லையறத் தானொளிரு நானிதுவே யின்னவர்தம் பேதமென வெண்ணுவாய் உடலை ஆத்மா என்று தன்னை அறியாத அஞ்ஞானியும், தன்னை உணர்ந்த ஞானியும் பாவிக்கிறார்கள். அஞ்ஞானிக்கு உடல் அளவே ஆத்மா. உடலின் உள்ளே ஆய்ந்து தன்னை யார்? என தன் ஆத்ம இருப்பை உணர்ந்த ஞானிக்கு நான் எனும் ஆத்மா எல்லையில்லாமல் ஒளிரும் வஸ்து வாகும். இதுவே இருவருக்குமான பேதம் என்று அறிவாயாக. அஞ்ஞானி உடலை ஆத்மா என்று கருதும் தேகாத்ம புத்தி உள்ளவன். உடலோடு தான் அழியப் போவதாக எண்ணுபவன். ஞானி தேகாத்ம புத்தி கழன்றவன். தான் தேகம் அல்ல என்ற ஞானம் பெற்றவன். இந்த பிரபஞ்சமே அவன். அதில் தோன்றி மறையும் ஒரு வஸ்து உடல் என்று எண்ணுபவன் ; மரண பயத்தை வென்றவன். அவனுக்கு இறப்பில்ல. மீண்டும் பிறக்கப் போவதும் இல்லை. இதுவே மெய்ஞானம். நான் அழிவில்லாத ஆத்மா என்ற ஆத்ம ஞானம் பெற்றவர் தத்துவஞானி. ஞானம் என்ற வாளால் முன்னை வினையை அறுத்தவர், பின்னை வினையை பிடித்து பிசைபவர். பகவான் ரமணர் தன்னை உணர்ந்த ஞானிக்கு சஞ்சித, ஆகாமிய, பிராரப்தம், ஆகிய மூன்று கர்மங்களும் அற்று முக்தி அடைந்தவன் என்று உபதேசிக்கிறார். ஞானிக்கு கர்மங்கள் அறவே அற்றுப் போனதால் வறுத்த விதை முளைக்காது என்பது போல அவன் பிறவாமை இறவாமை.என்ற முக்தி நிலை அடைந்தவன். அவனே ஜீவன் முக்தன். அகந்தை உணர்வு முற்றிலும் அழிந்து “நான் இருக்கிறேன்” எனும் ஆன்ம உணர்வை எப்போதும் மறவாது அதுவாய் இருப்பதுவே இறவாமையாகும். ஜீவன் முக்தனுக்கு பிறவாமை இறவாமை என்ற இரட்டைகள் இல்லை. சகல ஜீவராசிகளிலும் ஒளிரும் ஆன்ம உணர்வான “நான் இருக்கிறேன்” எனும் ஒருமை உணர்வு நிரந்தரமாக பெற்றவன். “ஓம் தத் சத்” —-----------------------------------------------